25 ஒப்பந்தங்கள் கையெழுத்து; ரஷ்யாவின் சிறந்த நண்பர் மோடி

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 03:51 pm
25-signing-contracts-modi-is-russia-s-best-friend

இந்தியா – ரஷ்யா இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விளாடிவாஸ்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

பிரதமரின் பேட்டியில், ‘தீவிரவாத தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருநாடுகளும் உள்ளது. அரசு மற்றும் தனியார் துறை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தி உள்ளன. ஏ.கே.-203 துப்பாக்கி இருநாடுகளும் இணைந்து தயாரிக்கும்’ என்றார்.

மேலும், விளாடிவாஸ்டாக்கிற்கு வரும் முதல் இந்திய பிரதமர் பெருமையை தான் பெற்றிருப்பதாகவும், தன்னை இங்கு அழைத்த எனது நண்பர் புதினுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சிறந்த நண்பர் நரேந்திர மோடி என்றும் அந்த நாட்டு அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ‘மிகவும் நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கி வருகிறது. வர்த்தகம், பொருளாதாரத்தில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன’ என்றும் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close