பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து டெல்லி புறப்பட்டார்!

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2019 09:46 pm
pm-modi-returns-from-russia

ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதன் பின்னர் அந்நாட்டு அதிபர் புதினுடன் இருநாட்டு நட்புறவு, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கப்பல் போக்குவரத்து, எரிசக்தித் துறை உள்ளிட்ட 15 ஒப்பந்தங்களும் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின. 

மேலும் சென்னைக்கும் விளாடிவோஸ்டாக் நகருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணம் முடிவுற்ற நிலையில், பிரதமர் மோடி, ரஷ்யாவில் இருந்து இன்று டெல்லிக்கு புறப்பட்டார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close