நேபாள-இந்திய பெட்ரோலியக் குழாய்த் திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

  கண்மணி   | Last Modified : 10 Sep, 2019 03:24 pm
pm-modi-and-nepal-pm-jointly-inaugurate-to-petroleum-product-pipeline

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர்  ஒளி ஆகியோர் இணைந்து காணொலி காட்சி மூலம் மோதிஹாரி-அம்லேக்கஞ்ச் இடையேயான பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் குழாயை  திறந்து வைத்தனர் .

இந்தியாவும் நேபாளமும் நட்பு அண்டை நாடுகளாக இருக்க வேண்டும், என்கிற நோக்கத்தில் "இந்தியா-நேபாள எரிசக்தி ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் எல்லை தாண்டிய பெட்ரோலியக் குழாய்த்திட்டம் முன்னெடுக்கபட்டது. சுமார் 60 கி.மீ க்கும் அதிகமான நீளமுள்ள இந்த பெட்ரோலியக் குழாய் திட்டம் தெற்காசியா பிராந்தியத்தில், முதன்முதலில் எல்லை தாண்டிய பெட்ரோலிய குழாய் திட்டமாக விளங்குகிறது.

முன்னதாக 1973 முதல்  டேங்கர்கள் மூலமாக இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதற்கு மாறாக குழாய்கள் மூலம் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் போக்குவரத்து செலவுகள் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக  " பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று புது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஒளி ஆகியோர் ஒன்றிணைந்து நேபாள-இந்திய எல்லை தாண்டிய பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் குழாய் இணைப்பு திட்டத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close