மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்கானது அல்ல: அமைச்சர் நிதின் கட்கரி  

  ராஜேஷ்.S   | Last Modified : 11 Sep, 2019 10:19 pm
motor-vehicle-act-is-not-for-revenue-minister-nitin-gadkari

மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல; மக்களின் உயிரைக்காக்கவே என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரின் பேட்டியில் மேலும், ‘மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு இல்லையா?. சாலை விபத்துகளால் உள்நாட்டின் மொத்த உற்பத்தியில் 2% இழக்கிறோம். சட்டத்தின் மீது மரியாதை, பயத்தை உருவாக்கவே மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துகிறோம். வருவாயை பெருக்குவதற்காக உள்நோக்கத்துடன் அபராதத்தொகையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல. ஆட்டோமொபைல் உற்பத்தியின் மையமாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கிறேன்’ என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close