விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம் தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 03:41 pm
pension-scheme-for-farmers

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

60 வயதை கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் வழங்கும் பிரதான் மந்திரி கிஷான் மான் – தன் யோஜனா என்ற திட்டத்தை ராஞ்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.18 முதல் 40 வயதுடைய சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ.55 லிருந்து ரூ.200 வரை செலுத்தலாம். விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசும் செலுத்தும். 60 வயதில் ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபின் பிரதமர் பேசுகையில், ‘தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டத்திற்காக ரூ.10,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 லட்சம் விவசாயிகள் இந்த பென்சன் திட்டத்தில் பயன்பெறுவார்கள். நாட்டை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடித்து அவர்களை உரிய இடத்தில் வைப்போம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close