எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 06:48 pm
fuel-supply-will-not-be-affected-union-petroleum-minister-dharmendra-pradhan

சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கச்சா பதப்படுத்தும் வசதி கொண்ட ஆலை கடந்த சனிக்கிழமை ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் விலை கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் மிக அதிக உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்குமா? என்று கேள்வி எழும்பியது.

இந்த நிலையில் இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது என நம்புகிறோம். இந்தியாவுக்கு நிலையான கச்சா எண்ணெய் விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் ஆலைகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.ரியாத்தில் உள்ள இந்திய தூதர் எண்ணெய் ஆலைகளின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு நிலையான கச்சா விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close