50 பைசாவுக்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்...ஐ.ஆர்.சி.டி.சியில்...

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 10:44 pm
irctc-s-rs-10-lakh-travel-insurance-for-less-than-50paisa-here-s-how-you-can-claim-money

ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018 அக்டோபர் 1ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவருக்கு 50 பைசாவுக்கும் குறைவாக இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி இணையத்தளத்தின் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு கூடுதலாக ஒரு வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் போது, இன்ஷூரன்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யும் பட்சத்தில், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படும்.

இதற்காக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 49 பைசா மட்டுமே. விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் பத்து லட்சம் ரூபாயும், நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டால் 7.5 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்தார். காயமுற்றால் இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். இதற்காக ஐஆர்சிடிசி ஸ்ரீராம் இன்சூரன்ஸ் கம்பெனி, ஐசிஐசிஐ இன்ஷூரன்ஸ் வங்கி, ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

நீங்கள் டிக்கெட் புக் செய்தவுடன் உங்களது இன்சூரன்ஸ் விபரங்கள் அடங்கிய படிவம் உங்களது பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். மேலும், இதுதொடர்பாக குறுஞ்செய்தியும் உங்களது மொபைல் எண்ணிற்கு வரும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close