ஜிஎஸ்டி வரி குறைப்பு: சுற்றுலா பயணிகள்,ஓட்டல் அதிபர்கள் மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 11:36 pm
gst-slashed-for-hotel-rooms

கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி குழு கூட்டத்தில், சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஓட்டல் அறை கட்டங்களுக்கு  விதிக்கப்படும் வரியை குறைத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

அதன்படி, ஓர் இரவு தங்க 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், 1001 - 7,500 வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, இதுவரை வசூலிக்கப்பட்ட, 18 சதவீத வரி, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

7,500க்கு மேல் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 28லிருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும், ஓட்டல் அதிபர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close