அமெரிக்கா சென்றடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 10:29 am
welcome-to-the-prime-minister-of-america

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

7 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஹூஸ்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில், பிரதமரை இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து, எரிசக்தி துறையின் சிஇஓக்கள் கூட்டத்திலும், எண்ணெய் நிறுவன முதன்மை தலைவர்களில் வட்டமேஜை கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் பங்கேற்றன.

அமெரிக்க எரிசக்தி நிறுவனத்திடம் 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்காக இந்தியாவின் பெட்ரோனெட் நிறுவனம் அமெரிக்காவின் டெலுரியன் நிறுவனத்துடன் ஒப்பந்தனம் கையெழுத்தானது. இயற்கை எரிவாயு வாங்க அமெரிக்க எரிசக்தி நிறுவனத்திடம் இந்தியா சுமார் இரண்டரை பில்லியன் டாலர் பங்கு முதலீடு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, சீக்கிய அமைப்பினர் பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இந்திய அரசு எடுத்த சில சாதகமான முடிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், 1984 சீக்கிய இனப்படுகொலை, டெல்லி விமான நிலையத்தை குரு நானக் தேவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அர்ப்பணித்தல், இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவு மற்றும் ஆனந்த் திருமண சட்டம், விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close