காஷ்மீரை, பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேரு தான் காரணம் : அமித்ஷா!!!

  கண்மணி   | Last Modified : 22 Sep, 2019 09:14 pm
jawaharlal-nehru-responsible-for-pak-occupied-kashmir-amit-shah

 ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க, முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

மகாராஷ்ட்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மும்பையில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட  அமித் ஷா பேசியதாவது;  1947ம் வருடம் நேரு அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தியதன் விளைவாகவே காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததாக அமித் ஷா குற்றம் சாட்டினார். மேலும்  காஷ்மீர் விவகாரத்தை  முதல் உள்துறை மந்திரியாக இருந்த வல்லபாய் படேல் கையாண்டிருந்தால் அன்றே ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கும் என கூறினார்.

தொடந்து பேசிய அமித் ஷா; காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதை காங்கிரஸ் அரசியலாக்க பார்ப்பதாகவும், தாங்கள் அதை தேசிய பிரச்னையாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close