சோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்

  அனிதா   | Last Modified : 23 Sep, 2019 10:42 am
karthi-chidambaram-thanked-sonia

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தங்களை சந்தித்தது ஊக்கமளிப்பதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். அவர்களுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் தந்தையை சந்தித்து பேசினார். 

தந்தையை சந்தித்துவிட்டு வெளியே வந்த கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் ஆதரவு எங்களது அரசியல் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் என்றும், தந்தையை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர்களுக்கு எங்கள் குடும்பம் மிகவும் கடமைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close