பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது; இனி செயல்தான்: பிரதமர் நரேந்திர மோடி 

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 09:43 pm
the-time-to-speak-is-over-prime-minister-narendra-modi

பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இனி செயல்தான் என்றும், ஐ. நா.வின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

7 நாள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஹூஸ்டன் நகரில்  நடைபெற்ற "ஹௌடி மோடி" என்ற நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில்  உரையாற்றினார்.

இதையடுத்து, நியூயார்க் நகருக்கு வந்த பிரதமர்  நரேந்திர மோடி, அங்கு பருவநிலை மாற்றம் குறித்த ஐ. நா.வின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

அதில்’ பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்ட்து; இனி உலகத்திற்கு தேவை செயல்பாடுதான். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும். நீர்வள மேம்பாடு, நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்புக்காவே ‘ஜல் ஜீவன்’ பணியை நாங்கள் தொடங்கினோம். மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close