நெட்டிசன்களின் மரண கலாய்க்கு ஆளான சசி தரூர்

  அபிநயா   | Last Modified : 24 Sep, 2019 03:35 pm
who-s-india-gandhi-netizens-question-shashi-tharoor-on-twitter

சசி தரூரின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், "இந்திரா காந்தி"யை "இந்தியா காந்தி" என தவறாக டைப் செய்து, நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளாகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூரின் சமீபத்திய பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அவரது பதிவில், "அமெரிக்காவில் 1954 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்தியா காந்தி" என ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் "இந்திரா காந்தி" என்பதை தவறாக "இந்தியா காந்தி" என டைப் செய்து, நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளாகியுள்ளார்.

 

— Shashi Tharoor (@ShashiTharoor) September 23, 2019

"யார் அந்த இந்தியா காந்தி?"  எனக் கிண்டலாக கேட்டு அனைவரும் அவரை கேள்விகளால் துளைத்த வண்ணம் உள்ளனர்.

மேலும், அந்த புகைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை மாஸ்கோவில் எடுக்கப்பட்டது என்றும், அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1954 அல்ல 1956 எனவும் கூறி, அவரை கலாய்க்கும் வகையில் பதிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதற்கு பதிலளித்த சசி தரூர், "இந்த புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டதானாலும், என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் வெளிநாடுகளில் பெரும் மதிப்பு இருந்தது என்பதே நான் கூற வருவது" என்று கூறினார்.

சசி தரூரின் ட்விட்டர் பதிவுகள் சமீப காலமாகவே சர்ச்சைக்கு உள்ளாகி வருவதும், அவரது கட்சியே அவரை மோடிக்கு ஆதரவு அளிக்கிறார் எனக் குற்றம் சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close