பிரதமர் மோடியின் விருப்பப்படி மக்கள் பணியாற்ற ஆவல்: ப.சிதம்பரம் 

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2019 08:32 pm
prime-minister-modi-wishes-to-serve-the-people-p-chidambaram

தனது பிறந்தநாளுக்கு தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த ப.சிதம்பரம், தற்போதைய துன்புறுத்தல் முடிந்த பிறகு பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு பிரதமர்  நரேந்திர மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

இதற்கு நன்றி தெரிவித்து ப.சிதம்பரம் ட்விட்டரில், ‘என் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சி அடைந்தேன். பிரதமருக்கு நன்றி. பிரதமரின் வாழ்த்துப்படி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம். துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாகவே இருக்கின்றனவே?. தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close