இந்திராணி முகர்ஜியை சந்தித்ததற்கான ஆதாரத்தை அழித்துவிட்டார் ப.சிதம்பரம்: சிபிஐ குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 10:14 pm
p-chidambaram-destroyed-evidence-of-meeting-indrani-mukerjea-cbi-tells-court

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜியை சந்தித்ததற்கான ஆதாரத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழித்துவிட்டதாக சிபிஐ நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனரான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விரும்புவதாக ஏற்கனவே சிபிஐயிடம் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் இந்திராணி முகர்ஜியை சந்தித்ததற்கான ஆதாரங்களை திட்டமிட்டு அழித்துள்ளார் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்திராணி இந்த வழக்கில் அப்ரூவராக மாற முன்னதாகவே விருப்பம் தெரிவித்ததால் இந்த தகவல்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிபிஐ வாதிட்டது.

இறுதியில் விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close