பெண் குழந்தைகளை கொண்டாட  “பாரத் கி லட்சுமி”: பிரதமர் அழைப்பு 

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 11:54 am
bharat-ki-lakshmi-prime-minister-s-call-to-celebrate-girls

பெண் குழந்தைகளை கொண்டாட  “பாரத் கி லட்சுமி” என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று, “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

“மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முதலில், நவராத்திரி பண்டிகையையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தங்களுடைய படிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், மாணவர்களின் அனுபவங்கள் அடிப்படையில்  “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுத முற்படுவேன் என்றும் கூறினார்.

மேலும், பெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி” என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெண்களின் சாதனைகளை #BharatKiLakshmi என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என்றும், பெண்கள் திறமை, வலிமையை நாரி சக்தி என்ற பெயரில் கொண்டாடுவோம் என்றும்  “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close