இ-சிகரெட்களால் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பதால், அரசு அதற்கு தடைவிதித்துள்ளதாகவும், புகையிலையை கைவிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘சுவாசப் பிரச்னை, இதயக்கோளாறு, நரம்பியல் கோளாறுகள், மரபணுக்களில் இ-சிகரெட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பதால் இ-சிகரெட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது’ என்று பிரதமர் பேசினார்.
புகையிலை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோட், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளதால், புகையிலை உபயோகத்தை தவிர்த்து, ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும் என்றும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.
மேலும், காந்தியின் 150-ஆவது பிறந்தநாளின் போது பிளாஸ்டிக் உபயோகத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், தீ விபத்துகள் ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
newsmtm.in