காங்கிரஸ் கூடாரத்தில் உட்கட்சிக் குழப்பம் உச்சத்தை அடைந்து வருகிறது!!!

  அபிநயா   | Last Modified : 04 Oct, 2019 02:33 pm
ahead-of-haryana-and-maharashtra-polls-congress-face-lots-of-protests-from-their-own-party-members

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள்  உட்கட்சிக் குழப்பம் உச்சத்தை அடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்  உட்கட்சிக் குழப்பம் உச்சத்தை அடைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், சோனியா காந்தியின் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து அசோக் தன்வார் கூறுகையில், காங்கிரஸ் கட்சி, முக்கிய காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தலில் பங்குபெற அனுமதிக்காமல், 5 கோடி ரூபாய் விலைக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் விலைக்கு விற்று வருவதாகவும், இதுவரை கட்சிக்காக உழைத்தவர்களை மதிக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கிரண் சௌத்ரி பரிந்துரை செய்த வேட்பாளர்களின் பெயர்களும், பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close