காஷ்மீரில் இதுவரை ஒரு  குண்டு கூட வெடிக்கவில்லை - ராகுல் காந்திக்கு பதிலளித்த அமித் ஷா

  அபிநயா   | Last Modified : 10 Oct, 2019 07:35 pm
not-a-single-bullet-fired-in-kashmir-amit-shah-s-reply-to-rahul-gandhi-river-of-blood-remark

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரே யுத்த களமாக காட்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார் அமித் ஷா.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில சங்கலி நகரில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதால், இனி இந்தியாவின் பிற மாநிலங்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் காஷ்மீரும் பெரும். . 

இப்போது சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் நன்றாக தெரியும், இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மரணம் 10 பகையாளிகளின் மரணத்திற்கு காரணமாக அமையும் என்று.

எனினும், எதிர்கட்சி உறுப்பினர்களான ராகுல் காந்தி மற்றும் ஷரத் பவார் இருவரும், காஷ்மீரே யுத்த களமாக காட்சி அளிக்கிறது என்று தவறான செய்திகளை தங்களது அரசியல் லாபத்திற்காக பரப்பி வருகின்றனர். இதுவரை காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கவில்லை.

அப்பாவி மக்களை தாக்குவது மத்திய அரதின் நோக்கமில்லை என்பதையும்,  காஷ்மீரின் நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடனே பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதையும் அவ்விருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி, அம்மாநிலத்திற்காக என்ன செய்திருக்கிறது என்று கேள்வியெழுப்பி, இதற்கான பதிலையும் பதிவு செய்யுமாறு ஷரத் பவாரிடம் கிண்டலாக கூறியுள்ளார் அமித் ஷா.

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில், கடந்த செப் 19., அன்று, தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, "ஷரத் பவார் போன்ற அனுபவம் நிறைந்த தலைவர், பாகிஸ்தானை விரும்புவதாக கூறுவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஷரத், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நான் இப்படிப்பட்ட கருத்துக்களை என்றும் கூற மாட்டேன். பாகிஸ்தான் தலைவர்கள், அரசியல் லாபத்திற்காக, இந்தியாவை குறித்த தவறான விஷயங்களை அந்நாட்டு மக்களிடம் செலுத்த முயற்ச்சிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியுடன் ஒரு முறை பாகிஸ்தான் சென்ற போது, இந்தியாவின் மீது அந்நாட்டு மக்கள் கொண்டிருந்த அன்பு என்னை வியக்க வைத்தது" என்று தான் நான் குறிப்பிட்டேன் என்று விளக்கமளித்திருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close