பிரதமரின் தமிழக பயண விவரம்

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 07:47 am
prime-minister-of-the-tamilnadu-travel-information

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக பயண விவரத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று நண்பகல் தனிவிமானத்தில் சென்னை வரும் பிரதமர் 12.35-க்கு ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார். பகல் 12.55 மணிக்கு கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதிக்கு செல்லும் பிரதமர் மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். மாலை 5 மணிக்கு மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.45 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை பார்வையிடல்; 6.45 மணிக்கு சீன அதிபருடன் உணவு உபசரிப்பு நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து மீண்டும் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதிக்கு பிரதமர் செல்கிறார். 

மறுநாள் காலை  10 மணிக்கு விடுதியில் சீன அதிபருடன் தேநீர் விருந்தில் பிரதமர் பங்கேற்கிறார். காலை 10.50 மணி இந்திய - சீன குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காலை 11.45 மணிக்கு சீன அதிபர் பிரதமர் நட்சத்திர விடுதியில் மதிய உணவு சாப்பிடுகின்றனர். பகல் 1.05 மணிக்கு கோவளத்தில் இருந்து விமான நிலையம் பயணம் மேற்கொள்ளும் பிரதமர்; மதியம் 2.05 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close