தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிந்ததா காங்கிரஸால் -  ஜ்யோதிராதித்தய சிந்தியா அதிரடி!!!

  அபிநயா   | Last Modified : 11 Oct, 2019 03:03 pm
jyotiraditya-scindia-hits-out-at-his-own-government-in-mp-says-farmer-loans-not-waived-off-in-totality

"கடந்த தேர்தலின் போது, ஆட்சியில் அமர்ந்த 10 நாட்களில், 2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்களே, அதை நிறைவேற்ற முடிந்ததா" என்று தன் சொந்த கட்சிக்கு எதிராகவே கேள்வியெழுப்பியுள்ளார் ஜ்யோதிராதித்தய சிந்தியா. 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜ்யோதிராதித்தய சிந்தியா மற்றும் மத்திய பிரதேச மாநில முதலமைச்சரான கமல்நாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது கமல்நாத்தின் கடந்த தேர்தல் வாக்குறுதியான விவசாய கடன் தள்ளுபடிகள் நிறைவேற்றப்பட்டதா என்று கேள்வியெழுப்பியுள்ளார் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரான ஜ்யோதிராதித்தய சிந்தியா.

கடந்த ஆகஸ்ட் மாதம், விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில், ரூ.7000 கோடி வரையிலான விவசாயி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார் கமல்நாத். ஆனால், இதையடுத்து, தற்போது எழுப்பட்டிருக்கும் கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இவ்விருவருக்கும் இடையான கருத்து வேறுபாடுகளை போல, காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த பல முக்கிய தலைவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. 

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயமாக ஒரு சுயபரிசோதனை அவசியமென்று ஜ்யோதிராதித்தய சிந்தியா நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close