மாஜி துணை முதலமைச்சரின் பி.ஏ., மர்ம முறையில் மரணம்!

  Newstm Desk   | Last Modified : 12 Oct, 2019 07:51 pm
parameshwars-pa-found-dead-in-karnataka

கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வரின் தனி செயலராக இருந்த ரமேஷ் மர்ம முறையில் மரணம் அடைத்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜகவை சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக உள்ளார். இதற்கு முன், மஜத - காங்., கூட்டணி ஆட்சி நடைபெற்றது. குமாரசாமி முதலமைச்சராக இருந்த அமைச்சரவையில், காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதலமைச்சராக இருந்தார். 

அப்போது அவர் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, அவரது பி.ஏ.,ரமேஷ் மர்மமான முறையில் இ இன்று இறந்து கிடந்தார். 

அவர் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தையும், அவரது உடலையும் கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரிக்கின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close