மனநோயாளி போல் செயல்படுகிறார்: ஜெகன் மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு புகார்!!!

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 09:39 pm
jagan-mohan-reddy-is-acting-like-a-psycho-chandrababu-naidu

முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து ஒரு மனநோயாளி போல நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

"ஆந்திரபிரதேச மாநில முதலமைச்சர் மக்களுக்கு எதிரான சட்டங்கள் பிறப்பித்து வருகிறார். மற்ற கட்சி தலைவர்கள் மீது தேவையற்ற புகார்கள் எழுப்பி விசாரணைகள் மேற்கொண்டு வருகிறார். இதுபோன்று ஏடாகூடமான செயல்களில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அவருக்கு மனப்பிறழ்ச்சி ஏற்பட்டு மனநோயாளியாக மாறிவிட்டார் எனத் தோன்றுகிறது." என குற்றம் சுமத்தியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. 

ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்கள் எட்டு பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close