56 அங்குல  மார்பளவு கொண்டவருக்கு மட்டுமே சட்டப்பிரிவு 370 நீக்கும் நெஞ்சுறுதி இருந்தது: அமித் ஷா அசத்தல்!!!

  அபிநயா   | Last Modified : 13 Oct, 2019 04:06 pm
earlier-pms-couldn-t-do-what-man-with-56-inch-chest-did-amit-shah

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறயுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் தைரியம் பிரதமர் மோடிக்கு மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு பெரும் கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

மகாராஷ்டிரா மாநிலம் கொல்ஹாபூர் நகரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அமித் ஷா, "இதுவரை இந்தியாவை எத்தனையோ தலைவர்கள் ஆண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று பல ஆண்டுகளாக கூறிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், இதுவரை ஆட்சி புரிந்த யாராலும் பிரதமர் மோடி எடுத்திருக்கும் இந்த முடிவை எடுக்க முடியவில்லை.

மத்திய அரசை குறை கூறும் தலைவர்களால் இப்படி ஒரு தீரிமானத்தை எடுக்க முடிந்ததா" என்று கேள்வியெழுப்பி, "56 அங்குல மார்பளவு கொண்டவருக்கு மட்டுமே சட்டப்பிரிவு 370 நீக்கும் நெஞ்சுறுதி இருந்தது" என அசத்தலாக பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close