அயோத்தியில் 144 தடையுத்தரவு!!!

  அனிதா   | Last Modified : 14 Oct, 2019 08:23 pm
144-in-ayodhya

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வெளியிடவுள்ள நிலையில், அயோத்தியாவில் 144 தடையுத்தரவை அமல்படுத்தி உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் இந்துகளுக்கு சொந்தமானது என்று, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள் சார்பிலும், அந்த நிலம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என இஸ்லாம் அமைப்பு சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு டிசம்பர் 10ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி, கோவர்தன் போன்ற வரவிருக்கும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு

இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close