நீரில் மூழ்கும் காங்கிரஸை கைவிட்ட கேப்டன் ராகுல் காந்தி - அசாதுதின் ஓவாய்ஸி குற்றச்சாட்டு

  அபிநயா   | Last Modified : 15 Oct, 2019 02:36 pm
congress-a-sinking-ship-rahul-gandhi-the-captain-who-left-it-says-aimim-chief-asaduddin-owaisi

"காங்கிரஸ் என்னும் கப்பல் நீரில் மூழ்க தொடங்கிவிட்டது. ஆனால் காப்பாற்ற வேண்டிய கேப்டன் ராகுல் காந்தி அதனை கைவிட்டு விட்டார்" என ஏ.ஐ.எம்.ஐ.எம்-ன் தலைவர் அசாதுதின் ஓவாய்ஸி குற்றம் சுமத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஏ.ஐ.எம்.ஐ.எம்-ன் தலைவரும் லோக் சபா எம்.பி யுமான அசாதுதின் ஒவாய்ஸி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

"நீரில் மூழ்கும் கப்பலையும் அதனுள் இருக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அந்த கப்பலின் கேப்டனுக்கு இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக, காங்கிரஸ் என்னும் கப்பல் நீரில் மூழ்கி கொண்டிருக்கும் நேரத்தில், கப்பலாகிய கட்சியையும், மக்களாகிய உறுப்பினர்களையும் காப்பாற்ற வேண்டிய கேப்டன் ராகுல் காந்தி, கப்பலை மூழ்க விட்டுச் சென்றிருப்பது வேதனை அளிக்கும் ஒரு விஷயம்" என்று கூறியுள்ளார்.

மேலும், காங்கிரஸின் 70 ஆண்டுக்கால ஆட்சியினால் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தினாலும், கடவுளின் ஆசியாலும் தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முத்தாலக் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், மத்திய அரசு, அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் எதிராக செயல்பட்டிருப்பதாக கூறி பாஜகவையும் குற்றஞ்சாட்டியுள்ளார் அசாதுதின் ஓவாய்ஸி.

நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில், மாநிலத்திற்கான 288 இடங்களில் 44 இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி போட்டியிடவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டிற்கான தேர்தலில், போட்டியிட்ட 24 இடங்களில் 2 இடங்களை வென்றிருந்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி, தற்போது போட்டியிடவுள்ள அனைத்து இடங்களிலிலும் வெற்றிபெரும் என எதிர்ப்பார்ப்பதாக அக்கட்சியின் தலைவர் ஒவாய்ஸி கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close