ராகுல் காந்தி பேசப்பேச பாஜகவிற்கு ஓட்டுகள் குவியும் - தேவேந்திர பட்னவிஸ் !!

  அபிநயா   | Last Modified : 15 Oct, 2019 04:15 pm
the-more-rahul-gandhi-speaks-the-votes-of-bjp-sena-will-keep-rising-says-maharashtra-cm-devendra-fadnavis

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருப்பதை தொடர்ந்து, ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபாது இல்லாத காரணத்தினால் தான் தேர்தல்  நேரத்தில் பாங்காக் சென்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில யாவத்மால் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்திக்கு கட்சியின் மீதிருந்த ஈடுபாடு குறைந்து விட்டதாகவும் அதனால் தான் பிரச்சாரத்தில், போன தேர்தலின் போது பேசிய அதே விஷயங்கள் குறித்து பேசியதாக குற்றம் சுமத்தினார். மேலும், தேர்தல் நேரத்தில் பாங்காக் சென்றதிற்கும் அவரது ஈடுபாடின்மை தான் காரணம் என்றும், பிரச்சாரத்தில் அவரது பேச்சுக்களினால், பாஜகவிற்கு தான் வாக்குகள் குவிந்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close