பாஜகவுடன் இணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள்

  அபிநயா   | Last Modified : 15 Oct, 2019 03:45 pm
jolt-for-sharad-pawar-ncp-mlc-ex-mla-join-bjp-ahead-of-maharashtra-polls

மகாராஷ்டிரா மாநிலத்தில், அம்மாநில சட்டப்பேரவைக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ராமராவ் வாட்குதே மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பாப்பு பாத்தாரே ஆகிய இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close