ஹரியானாவின் அன்பு தான் என்னை இங்கே வரவைத்தது - பிரதமர் மோடி

  அபிநயா   | Last Modified : 15 Oct, 2019 05:32 pm
haryana-itself-calls-me-i-can-t-stop-myself-from-coming-here-pm-modi

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ஓட்டு கேட்பதற்காக ஹரியானா வரவில்லையென்று என்று கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம், சார்க்கி தாத்ரி நகரில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை சந்தித்த பிரதமர் மோடி, "ஹரியானாவிற்கு பாஜகவை குறித்து பேசுவதற்காகவோ, ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்வதற்காகவோ, நான் இங்கே வரவில்லை. உங்களுக்காகவும் உங்களது அழைப்பையும் ஏற்று தான் வந்தேன். நீங்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பு தான் என்னை வரவைத்தது" என்று கூறியுள்ளார்.

மேலும், ஹரியானா மாநிலத்தை பொறுத்த வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஏற்கனவே மக்கள் தன்னை தேர்ந்தெடுத்து விட்டது தனக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கான கடைசி நாளாக அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, வரும் அக்டோபர் 18 அன்று, ஹரியானா மாநிலத்தில், ஜாட் இன மக்கள் அதிகம் காணப்படும் இரு இடங்களில்,  தேர்தலுக்கான இறுதி நாள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் பிரதமர் மோடி. 

தற்போது நடக்கவுள்ள தேர்தலுக்கான முடிவுகள், வரும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close