இரண்டு தீபாவளிகள் கொண்டாடப்போகும் பிரதமர் மோடி!!  

  அபிநயா   | Last Modified : 15 Oct, 2019 05:33 pm
i-request-people-to-celebrate-2-diwali-s-this-year-modi

ஹரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, பெண் குழந்தைகளையும், அவர்களது சாதனைகளையும் பாராட்டத்தக்க வகையில் இரண்டு தீபாவளிகள் கொண்டாடுமாறு ஹரியானா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த சீன அதிபர் ஜின்பிங், அமீர்கான் நடிப்பில் வெளியான "தங்கல்" படம் மிகவும் நன்றாக இருந்ததாகவும், இந்திய பெண்களின் வீரத்தைக் கண்டு அசந்து போனதாகவும் குறிப்பிட்டதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய பிரதமர் மோடி, அவரது அந்த பாராட்டை பெற்றபோது, இந்திய பெண்களை நினைத்து பெருமிதம் அடைந்ததாக கூறினார்.

இத்தகைய பெருமைகளை இந்தியாவுக்கு தேடி தரும் பெண்களுக்காக, அவர்களது சாதனைகளை பாராட்டும் வகையிலும், இதுபோன்று அவர்கள் மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்தியும், இந்த தீபாவளியை தான் இரண்டு தீபாவளிகளாக பிரித்து தொண்டாடப்போவதாகவும், அவ்வாறே மக்களும் கொண்டாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

மேலும், துரோனாச்சாரியா விருது பெற்ற குத்துச்சண்டை வீரரான மஹாவீர் சிங் போகத்தின் மகளும், காமன்வெல்த் போட்டிகளில் இருமுறை தங்கப்பதக்கமும் வென்ற பபிதா போகத், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தாத்ரி நகரின் பாஜக வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close