பூனே நகரில் 12 மணி நேரம் விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுபாடுகள்

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 09:56 am
12-hours-transport-restriction-in-pune-for-pm-modi-s-election-rally

மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டபேரவை தேர்தலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவிருக்கும் பிரதமர் மோடிக்காக, பூனே நகரில் 12 மணி நேரம் போக்குவரத்து கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்காக பூனே நகரில் 12 மணி நேரம் போக்குவரத்து கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கான இடப்பற்றாக்குறையால், பிரச்சாரத்திற்கு வருகை தரும் மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை உபயோகிக்குமாறு காவல் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கான இறுதி நாள் வரும் அக்டோபர் 19 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பார்லி, சதாரா மற்றும் பூனே நகரில் நேற்று (வியாழன்) பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close