யார் கூறினார்கள் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் மும்மரமாக இல்லை என்று?? சரத் பவார் கேள்வி!!

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 09:47 am
congress-in-working-on-grass-root-level-sharad-pawar

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில், காங்கிரஸ் ஓய்ந்து விட்டதாகவும், தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதாகவும் பலரும் கிண்டலடித்து வரும் நிலையில்,  காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் மும்மரமாகதான் இருக்கிறார்கள் என அவர்களுக்கு ஆதரவாக கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் வேலைகளில் மும்மரமாக இல்லை, தேர்தலுக்கு முன்னரே தோல்வியை அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர், ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபாடு குறைந்து விட்டது, என பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், அந்த கருத்துக்கள் அனைத்தும் தேவையற்றவை எனவும், அவர்கள் தேர்தலுக்காக மிக மும்மரமாக வேலை செய்து வருவதாகவும்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

மேலும், "தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரு தனி கட்சிகளாக இருக்கலாம். ஆனால், கூடிய விரைவில் இரண்டும் ஒன்றாக இணையும், ஏனெனில் தற்போது நாங்களும் சோர்வடைந்து விட்டோம் அவர்களும் சோர்வடைந்து விட்டார்கள்" என்ற காங்கிரஸ் தலைவரின் பேச்சுக்கு பதிலளித்துள்ளார் சரத் பவார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close