அதிதி சிங் யை குறிவைக்கும் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 03:48 pm
congress-hits-out-at-mla-aditi-singh-for-meeting-cm-yogi-adityanath

உ.பி. மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யை சந்தித்ததாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு அவரின் அச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிவிப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழனன்று உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யை சந்தித்த அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங், அவரது தொகுதியின் வளர்ச்சி குறித்து முதலமைச்சருடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டிருந்தார். 

இதனை தொடர்ந்து, முதலமைச்சருடனான அவரது சந்திப்பு சுயநிலம் நிறைந்தது எனவும், அவரது சந்திப்பு குறித்து கண்டனம் தெரிவித்து அறிவிப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கு அவரிடமிருந்து பதில் வரவில்லையெனில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அதிதி சிங், "ஐ.நா. வில், 16 மற்றும் 17 ஆகிய நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் உ.பி மாநிலம் தகுதி பெற்றிருப்பதை குறித்தும், எனது தொகுதிக்கான வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடுவதற்காக தான் நான் அவரை சந்தித்தேன்" என்று கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close