முந்தைய அரசுகளை குற்றம் சாட்டுவதில் மும்மரமாக உள்ளது மத்திய அரசு - மன்மோகன் சிங்

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 06:39 pm
ruling-party-is-so-eager-in-blaming-the-predecessors-manmohan-singh

மன்மோகன் சிங் மற்றும் ரகுராம் ராஜனின் அலட்சியம் தான் இந்திய பொருளாதார சரிவுக்கு காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, முந்தைய அரசுகளை குற்றம் சாட்டுவதில் தான் மத்திய அரசு மும்மரமாக உள்ளது என பதிலளித்துள்ளார் மன்மோகன் சிங். 

கடந்த செவ்வாயன்று (அக்டோபர் 15), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய இந்திய பொருளாதார சரிவிற்கும், பொதுத்துறை வங்கிகளின் மோசமான நிலைக்கும், மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். 

இதற்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், "பொதுத்துறை வங்கிகளின் மோசமான நிலையை சரி செய்ய இவர்களுக்கு 5 ஆண்டுகள் போதுமானதாக இல்லையா? தங்களால் சரிசெய்ய இயலாத காரியங்களுக்கு அதற்கு முன் இருந்த அரசின் அலட்சியம் தான் காரணம் எனக் கைக்காட்டுவது எப்படி சரியாகும்? ஓர் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டுமானால், அது சரிவடைந்ததற்கான காரணத்தை தான் ஆராய வேண்டும். ஆனால் மத்திய அரசு, அதற்கு முன் ஆட்சியில் இருந்த அனைவர் மீதும் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close