ஐஸ்ஐஸ் அமைப்பின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியிருந்தாரா கமலேஷ் திவாரி??

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 10:14 pm
hindu-samaj-leader-was-on-isis-hitlist

உ.பி மாநிலம் லக்னோ நகரில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஈராக்-ன் ஐஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பின் தேடுதல் பட்டியலில் அவரது பெயர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி இன்று கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இதனிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஈராக்-ன் ஐஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கமலேஷ் வழக்கு பதிவு செய்திருந்தார் என தெரிய வந்துள்ளது.

ஐஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கமலேஷ் வழக்கு பதிவு செய்திருந்தும், உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய அரசும் அதை கண்டுகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு நபிகள் நாயகம் குறித்து இவர் கருத்து தெரிவித்திருந்ததை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் தான் வெளிவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close