வாஜ்பாய் ஜென்டில் மேன்; மோடி ஸ்ட்ராங் மேன் - சரத் பவார் கருத்து

  அபிநயா   | Last Modified : 19 Oct, 2019 07:53 pm
vajpayee-gentleman-modi-strong-man-sharad-pawar

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

"ஓர் நாட்டை ஆள வேண்டும் என்றால் அதற்கு தனி திறமை வேண்டும். அந்த திறமை இரு தலைவர்களுக்கும் உள்ளது. வாஜ்பாய் ஜென்டில் மேன் என்றால், மோடி  ஸ்ட்ராங் மேன் ஆக திகழ்கிறார். வாஜ்பாய் சாஹிப், ஒரு முடிவுக்கு வரும் முன்பு, அவரது தீர்மானம் யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தான் எடுக்கும் தீர்மானங்களில் நிலைத்து நிற்பவர். எதிரில் வரும் எந்த தடைகள் குறித்த கவலையோ பயமோ அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

மென்மையான பண்பு கொண்டு வாஜ்பாயினால், எதிர்கட்சிகளை கடுமையாக கண்டிக்க என்றுமே முடிந்ததில்லை, அவர் யாரையும் கடுமையாக விமர்சித்ததும் இல்லை. ஆனால், எந்த ஒரு விமர்சனத்திற்கும் அஞ்சாத, யாரையும் விமர்சிக்கவும் அஞ்சாதவர் தான் மோடிஜி.

மோடியின் தேர்தல் கால பிரச்சாரங்களும், புதிய பல திட்டங்களும் மக்களை வெகுவாக கவர்கிறது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் வித்திட்ட விதைகள் தான் இன்று நரேந்திர மோடி அறுவடை செய்ய பயிர்களாக வளர்ந்த நிற்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது.அதற்கு மோடியும் நிச்சயமாக மறுப்பு தெரிவிக்க மாட்டார். இந்த 20 வருடங்களில் பாரதிய ஜனதா கட்சி எட்டியுள்ள இடம் நிச்சயமாக மிகவும் உயர்ந்ததுதான். 2 இடங்களில் இருந்து 282 இடங்களில் வெற்றி பெறுவதென்பது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விஷயமும் கூட.

இதன் மூலம், இந்தியாவின் வரலாற்றில் குறிப்பிடப்படும் முக்கிய தலைவர்களுல் ஒருவர் என்ற நிலையை எட்டியுள்ளார் நம் பிரதமர் மோடி" என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், சமீபகாலமாக, சரிந்துக்கொண்டிருக்கும் தனது கட்சியை  தாங்கி பிடிக்க இயலாமல், தனது அரசியல் சரிவையும் சரி செய்ய இயலாமல் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்து வருகிறார்

இந்நிலையில், அவரது அரசியல் வாழ்விற்கு ஓர் முழுக்கு போட நினைக்கும் அவர், வெகு விரைவில் கட்சியிலிருந்து பதவி விலகலாம் என்ற கூறப்படுகின்றது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close