தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் அலி முஹமது சாகர், பயங்கரவாதிகளான பர்ஹான் வானி மற்றும் சாகிர் ம்யூசா இருவரையும் தியாகிகள் என்று குறிப்பிட்டதோடு, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீரில், ஓர் பேரணியில் ஈடுபட்டிருந்த, ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான அலி முஹமது சாகர், மத்திய அரசுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளான பர்ஹான் வானி மற்றும் சாகிர் ம்யூசா இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்ததாகவும், அவர்கள் வீழ்ந்த மண்ணில், அவர்களின் மரணத்திற்கு காரணமான மத்திய அரசுக்கு வாக்களித்த காஷ்மீர் மக்கள் பெரும் தவறு இழைத்து விட்டதாகவும் ஓர் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துள்ளார் அலி முஹமது.
சமீபகாலமாக, தெற்கு காஷ்மீர் பகுதியில், பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்து வருவதை தொடர்ந்தே, அவர்களுக்கு எதிராக இந்த கருத்தை முன் வைத்துள்ளார் அலி முஹமது என்று அரசியல் உலகில் பேசப்படுகின்றன.
Newstm.in