டெல்லியை டார்கெட் செய்யும் பயங்கரவாதிகள் - எச்சரிக்கும் உளவுத்துறை!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 10:01 pm
let-jud-planning-terror-attacks-against-r-aw-indian-army-warns-intelligence-note

கடந்த சில மாதங்களாக,இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில்,பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தற்போது டெல்லி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு அலுவலகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா போன்ற பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில், தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களது அடுத்த டார்கெட் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் அமைந்திருக்கும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு அலுவலகம் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது மத்திய உளவுத்துறை.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி பிரதேசம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close