எந்த கட்சியுடனும் இணையப்போவதில்லை - அதிருப்தியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 01:09 pm
sp-won-t-tie-up-with-any-party-for-2022-state-polls-says-akhilesh-yadav

கடந்த 2019ஆம் ஆண்டிற்கான, லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தும் நோக்கத்துடன், பஹுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் தாள் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி, தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, வரும் 2022ஆம் ஆண்டிற்கான தேர்தலில் எந்த கட்சிகளுடனும் இணைந்த போட்டியிடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கட்சி சந்திப்பில் உரையாற்றிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்திரப்பிரதேச மாநிலத்தின் பொருளாதார சரிவிற்கும், அதிகரித்து வரும் வேலையின்மைக்கும் முழு காரணம் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதிக்யநாத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அலட்சியம் தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

மேலும், கடந்த சில ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வந்த சமாஜ்வாதி கட்சி, வரும் 2022 ஆம் ஆண்டு முதல் தனித்து போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி, மொத்தமாக போட்டியிட்ட 403 இடங்களில் வெறும் 43 இடங்களில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close