காஷ்மீர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 99.5 சதவீத வாக்களிப்பு!!

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 12:58 pm
99-5-per-cent-polling-registered-in-first-ever-bdc-elections-in-j-k

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இன்று அம்மாநிலத்தில் நடைபெற்ற முதல் உள்ளாட்சி தேர்தலில், 99.5 சதவீத வாக்களிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து,  இன்று, அம்மாநிலத்தின் 310 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற முதல் உள்ளாட்சி தேர்தலில் 99.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளார் மாவட்ட தேர்தல் அதிகாரி சுஷ்மா சவுகான்.

இந்திய சரித்திர்த்தில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமின்றி ஓர் தேர்தலில் ஓர் மாநிலத்தில் இத்தகைய வாக்குப் பதிவு நடைபெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், காஷ்மீரில் மக்கள் இத்தனையாண்டுகளாக பிரிவினைவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பயந்து வீட்டை விட்டு வெளியில் வந்து வாக்களிக்க பயந்துள்ளனர். சரியான பாதுகாப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை மத்திய அரசின் மீது ஏற்பட்டது மட்டுமின்றி பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளையும் அரசு கட்டுக்குள் கொண்டு வந்ததே இந்த வெற்றிபறைசாற்றுகிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close