மிரட்டுகிறதா சிவசேனா ; தடுமாறுகிறதா பாஜக - நிலைக்குமா இக்கூட்டணி??

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 09:25 pm
result-a-message-to-shun-arrogance-shiv-sena

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்ட பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், "பாஜக தனது அகந்தையை கைவிடவில்லை எனில், நாங்கள் கூட்டணியில் இருந்த விலக தயங்க மாட்டோம்" என்று எச்சரித்துள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி இடையே, வெற்றியை தொடர்ந்தும் கருத்து வேறுபாடுகள் நிலைத்து வரும் நிலையில், "பாஜக தனது அரசியல் அகந்தையை கைவிடவில்லை எனில், கட்சியிலிருந்து விலகவும் சிவசேனா தயங்காது" என்று பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. 

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவை முன்வைத்திருந்த சிவசேனா கட்சி, ஆதித்யாவின் வார்லி தொகுதி வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதற்கான பேச்சை தொடங்கியுள்ளது. 

இதனிடையில், பாரதிய ஜனதா கட்சி, சிவசேனாவின் இந்த கருத்துக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், இவ்விரு கட்சிகளின் கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close