ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் பாஜக!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 04:28 pm
khattar-to-stake-claim-to-form-govt-shortly-oath-taking-ceremony-likely-tomorrow

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் 24 அன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 40 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவான போதும், ஆட்சி அமைக்க 46 இடங்களின் வெற்றி தேவை என்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானது. 

பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், துஷ்யந்த சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஹரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டணி ஆட்சியில், முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மனோகர் லால் கட்டார் அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, துணை முதலமைச்சராக ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த சவுதாலா பதிவியேற்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளை மதியம் 2 மணி அளவில், மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கான புதிய அமைச்சரகம் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அறிவிக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close