ஹரியானாவில் பாஜக-ஜஜக ஆட்சி - 2வது முறை முதலமைச்சரான மனோகர் லால் கட்டார்!!

  அபிநயா   | Last Modified : 27 Oct, 2019 07:12 am
khattar-led-bjp-jjp-govt-set-to-be-sworn-in-haryana-on-sunday

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை வகுத்த நிலையிலும் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்த பாரதிய ஜனதா கட்சி, ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்ததை தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டாரும், துணை முதலமைச்சராக துஷ்யந்த சவுதாலாவும் நேற்று (சனிக்கிழமை) பதவியேற்றுள்ளனர்.

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஆட்சி அமைக்க 46 இடங்களின் வெற்றி அவசியம் என்ற நிலையில், 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தது.

இதை தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டாரும், துணை முதலமைச்சராக துஷ்யந்த சவுதாலாவும் நேற்று கவர்னர் முன்னிலையில் பதவியேற்றனர். 

இவர்களை தொடர்ந்து, அமைச்சர்களாக அணில் விஜ், பன்வாரிலால், ரஞ்சித் சவுதாலா மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த இரு தலைவர்களும் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர். 

முன்னர், துணை முதலமைச்சராக இருவரை அமர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close