சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு 

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2019 09:28 pm
prime-minister-narendra-modi-calls-on-international-investors

இந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீடு குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, ‘இந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு ஏதுவான சூழலில் உலகளவில் 3ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உலகளவில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளன. 2024ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலரை எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில் இந்தியா முதலீடு செய்யும். சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பிரதமர் பேசினார்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close