முதலமைச்சர் பதவி: சிவசேனா பிடிவாதம் 

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 10:57 am
chief-minister-s-post-shiv-sena-stubborn

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

மகாராஷ்ட்ராவில் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நடைபெற்று வருகிறது. சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி மற்றும் சரிசமமான அமைச்சர்கள் பதவி கேட்டு பாஜகவுக்கு சிவசேனா நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும், மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பது குறித்து பாஜகவுடன் சிவசேனா பேச்சு நடத்தவில்லை என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியான நிலையில் இன்று வரை ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close