இணைய பாதுகாப்பில் இந்தியா - ஜெர்மனி செயல்பட விருப்பம் : பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 03:00 pm
india-germany-to-act-on-cyber-security-prime-minister-narendra-modi

இணைய பாதுகாப்பில் இந்தியா - ஜெர்மனி செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் பிரதமர் நரேந்திர மொடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா - ஜெர்மனி இடையே வர்த்தகம், முதலீடுகள் தொடர்பாக 20 ஒப்பந்தகள் கையெழுத்தானது.

இதன்பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா - ஜெர்மனி செயல்பட விரும்புகிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட பலதரப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும்’ என்று பிரதமர் பேசினார்.

மேலும், இரு நாடுகள் இடையே தொழிற்பயிற்சி ஆசிரியர்களை பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close