ராகுலின் அயல்நாட்டு பயணங்களுக்கு யார் செலவு செய்கிறார்கள்: பாரதிய ஜனதா கேள்வி!!

  அபிநயா   | Last Modified : 01 Nov, 2019 07:56 pm
bjp-who-foots-bills-of-rahul-s-foreign-trips

கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தோனேசிய பயணம் மேற்கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து, அவரது அயல் நாட்டு பயண செலவுகளை யார் ஏற்பது என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் பாரதிய ஜனதா கட்சி தலைவர் நரசிம்ம ராவ்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் பாங்காக் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து, தற்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிராக, வரும் நவம்பர் 1 முதல் 15 தேதி வரை பேரணி மேற்கொள்ள எதிர்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தியான பயிற்சிக்காக இந்தோனேசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. 

இவ்வாறு தொடரும் இவரது அயல்நாட்டு பயணங்களினால் அதிருப்தி அடைந்த, பாரதிய ஜனதா கட்சியின் தலைமை பேச்சாளர் நரசிம்ம ராவ், "கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவர் 16 முறை அயல்நாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 9 பயணத்திற்கான காரணங்களே தெரிவிக்கப்படவில்லை. ஓர் பொது சேவை புரியும் பதவியில் இருக்கும் ஒருவர், அவரது வெளிநாட்டு பயணங்களுக்கான காரணம் மற்றும் வரவு செலவு ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என்பது விதி" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், இவ்வாறு அடிக்கடி காரணம் தெரிவிக்காமல் பயணம் மேற்கொள்ளும் இவரது செலவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close