ஜனாதிபதி என்ன பாஜகவின் ஜோப்பிலா இருக்கிறார் - சிவசேனா கிண்டல்!!

  அபிநயா   | Last Modified : 03 Nov, 2019 05:00 pm
is-president-in-your-pocket-shiv-sena-lashes-out-at-bjp-over-maharashtra-govt-conundrum

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்தும், பாஜக-சிவசேனா கட்சிகளுக்குள் கடும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் முதலமைச்சர் யார் என்பது முடிசெய்படவில்லையெனில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது தான் ஒரே முடிவு என்று கூறியிருந்த முகந்திவாரின் கருத்தை, ஜனாதிபதியை ஜோப்பில் வைத்துள்ளனரா பாஜக என்று வெகுவாக விமர்சித்துள்ளனர் சிவசேனா தலைவர்கள்.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வெற்றிபெற்றிருக்கும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சி, ஆட்சியை அமைப்பது குறித்து இதுவரையில் ஓர் தீர்மானத்திற்கு வராமல் இருக்கிறது. இதனிடையில், வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் தற்போதைய ஆட்சி காலம் முடிவடைவதால்,  7ஆம் தேதிக்குள் ஆட்சி அமைப்பது குறித்தான முடிவுக்கு இருகட்சிகளும் வரவேண்டும் எனவும், இதில் தவறினால், பின் ஜனாதிபதி ஆட்சி அமைப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார் பாஜக கட்சி தலைவரும், அம்மாநில நிதித்துறை அமைச்சருமான சுதிர் முகந்திவார்.

இவரின் இந்த கருத்தினால் அதிருப்தியடைந்த சிவசேனா கட்சி, தனது பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில், ஜனாதிபதி ஆட்சி என்று குறிப்பிடுவதன் மூலம் இவர்கள் யாரை மிரட்ட பார்க்கிறார்கள் என்று கேள்வியெழுப்பியதோடு, இவர்களின் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச நாங்கள் தயராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், சாம்னாவில், பட்டென்று ஜனாதிபதி ஆட்சி அமைக்க அவர்கள் ஜனாதிபதியை ஜோப்பிலா வைத்துள்ளார்கள் என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close