காங்கிரஸ்-என்சிபி உடன் இணைய போகிறதா சிவசேனா ??

  அபிநயா   | Last Modified : 03 Nov, 2019 04:03 pm
shiv-sena-says-congress-and-ncp-joining-hands-with-it-is-in-interest-of-maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் : தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக-சிவசேனா கட்சிகளிடையே கடும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், சிவசேனாவிற்கு அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்-தேசியவாத கட்சிகளுடன் இணைவதும் ஓர் நல்ல தீர்மானம் தான் என்று கூறியுள்ளார் அக்கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத்.

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 10 நாட்கள் கடந்த நிலையிலும், முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்ற தீர்மானத்திற்கு வரவில்லை பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி. இந்நிலையில், பாஜகவிற்கு எதிராக சிவசேனாவை திருப்ப முயற்சிக்கும் எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் என்சிபி, "உங்களது கருத்துக்களுக்கு செவி சாய்க்காத  பாஜகவை எதிர்த்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்று சிவசேனாவிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதை தொடர்ந்து, வெவ்வேறு கண்ணோட்டங்கள் கொண்டிருக்கும் இந்த மூன்று கட்சிகள் இணைவதும் நிச்சயமாக ஓர் நல்ல தீர்வு தான் என்று கூறியுள்ளார் சிவசேனா கட்சி தலைவரான சஞ்சய் ராவுத்.

"சிவசேனா ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைப்பது என்பது பாஜகவிற்கு ஓர் சவாலான விஷயம், ஏன் இயலாத காரியம் என்றே கூறலாம். ஆனால், பாஜகவை எதிர்க்கும் மற்ற கட்சிகளுடன் இணைந்து, 2.5 ஆண்டுகள் என்ன முழு முதலமைச்சர் காலமான 5ஆண்டுகளும் சிவசேனா ஆட்சி புரிவது மிக எளிதான காரியம்" என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் குறிப்பிட்டுள்ளார் சஞ்சய் ராவுத்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close