மோகன் பகவத்திடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை !!!

  அபிநயா   | Last Modified : 06 Nov, 2019 03:10 pm
uddhav-sends-letter-to-rss-cheif-uddhav-thackeray

மகாராஷ்டிரா மாநிலம் : ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து பாஜக-சிவசேனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு ஓர் தீர்வு கொண்டு வருமாறு அர்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 2 வாரங்கள் முடிவடைந்த நிலையிலும், வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணியிடையே, முதலமைச்சர் பதவி குறித்த கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வருகிறது. முதலமைச்சர் பதிவியை 2.5 ஆண்டுகள் பிரித்து கொள்ளலாம் என்ற சிவசேனாவின் பிடிவாததிற்கு, தலையசைக்க மறுக்கிறது பாஜக. இதை தொடர்ந்து, ஆட்சி அமைப்பது தாமதமாகி வருவதால், அம்மாநில அரசியல் உலகில் ஓர் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையில், நாளையுடன் அம்மாநிலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், இந்த பிரச்சனையில் தலையிட்டு ஓர் தீர்வு கொண்டு வருமாறு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க தலைவர் மோகன் பகவத்திடம் கோரிக்கை விடுத்து ஓர் கடிதம் அனுப்பியுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.

சிவசேனா "போலி அப்பாவித்தனம்" காட்டுகிறது என்று ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்ததை தொடர்ந்து, அவர்களின் ஆதரவை பெறுவதற்காக இந்த கடிதத்தை அனுப்பியிருக்கலாம் சிவசேனா என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close